Description
இந்திய அரசு அல்லது அவர்களல்லாதவர்களால் செய்யப்படும் அரசியல் வன்முறை அல்லது தீவிரவாதத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது.
இந்துத்துவ சக்திகள் 1990களில் ஏறுமுகத்தில் இருந்தபோது இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வருவதாக போலி பிரச்சாரம் செய்து அரசியல் லாபமீட்டினார்கள். பிந்தைய நாட்களில் அதுவே அரசின் கொள்கையாகவும் மாறியது.
“மதச்சார்பற்ற” ஊடகங்களும் உண்மை எது & பொய் எது என பிரித்தறியாமல் உளவுத்துறையின் ஏவலாளாக மாறினர். அடுத்தடுத்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட இப்பொய் பிரச்சாரம் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாக & முஸ்லிம்களே நம்பும் அளவிற்கு வீரியத்துடன் செய்யப்பட்டது.
பிரசித்திபெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரியும் தெல்கி ஊழலை வெளிக்கொணர்ந்தவருமான எஸ்.எம். முஷ்ரிப் இந்த போலி பிரச்சாரத்தை தன் சொந்த காவல்துறை அனுபவங்கள் மற்றும் பத்திரிகை செய்திகளை ஆய்வு செய்து இந்நூலை எழுதியுள்ளார்.
இப்போலி பிரச்சாரத்தின் பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என்பதையும் ஆய்வு செய்கிறார். மும்பை தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே இந்த போலி பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை வெளிஉலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் முயற்சியில் ஈடுபட்டார். உண்மையை வெளிக்கொணரும் அந்த மகத்தான பணியில் தன்னுடைய இன்னுயிரையும் அதே சக்திகளின் சதியால் இழந்தார்.
மேலும் இந்நூல் இந்தியாவில் பிரஸ்தாபிக்கப்பட்டு வரும்
“இஸ்லாமிய தீவிரவாதம்” அதற்கான காரணமாக கூறப்படும் சம்பவங்கள் அனைத்தையும் அடிப்படையற்றது & உண்மைக்கு புறம்பானது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது.





Reviews
There are no reviews yet.