Description
சிறுபிள்ளைகள் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும்போது சில முஸ்லிம் தாய்மார்கள் தனது பிள்ளை அழைப்பதற்கு, “வாப்பா, மம்மது காசிம் இங்க வா” என்று கூறுவதை தென் மாவட்டங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் அறிந்திருப்பார்கள்.
ஆனால் உண்மையில் அந்த பிள்ளையின் பெயர் ‘மம்மது காசிம்’ அல்ல, வேவென்றாக இருக்கும். ஆனால் பிள்ளைகளை செல்லமாக அப்படி அழைப்பதுண்டு. அவ்வாறு அழைக்கப்படும் ‘மம்மது காசிம்’ யார் என்று அழைத்தவருக்கும் தெரியாது அழைக்கப்படுபவருக்கும் தெரியாது.
யார் அந்த ‘மம்மது காசிம்’?
முகம்மது பின் காசிம் பிறந்தது கி.பி. 695ல் சவூதி அரேபியாவில் உள்ள தாயிப் எனும் நகரில். இவரின் ஆயுள் காலம் வெறும் 20 வருடங்கள்தான். தெற்காசியாவில் முஸ்லிம்களின் ஆட்சியை முதன் முதலில் நிறுவி கவர்னர் ஆஃப் சிந்து என அழைக்கப்பட்டவரும் இவர்தான்.
சிந்துப் பகுதியை கைப்பற்றிய முகம்மது பின் காசிம் என்ற இப்பெயர், சொல்வழிப் பயணமாக இந்தியாவின் தென்கோடிக்கு வந்திருக்கின்றதென்றால் அவரின் ஆட்சி எவ்வாறு இருந்திருக்கும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
அதனால்தான் என்னவோ பேரறிஞர் அண்ணா தனது திராவிடநாடு பத்திரிகையில் இவ்வாறு கூறுகிறார்,
“முஸ்லீம்களுக்கு, கண்ணும் கருத்தும் இல்லையா? சிந்து மாகாணத்தை வென்ற முஹமத் பின் காசீம் எனும் வாலிப வீரனின் சரிதத்தை மறப்பரா?
சரிதம் பயில அவர்களுக்கு நேரமும், வசதியும் கிடையாது போகலாம். ஆம்! இன்று அவர்களுள்ள ஏழ்மை நிலையில், அவை கிடைப்பதுமில்லை. ஆனால், அவர்களின் மூதாதையர், கட்டியகோட்டை கொத்தளங்கள், காலத்தால் கலனாக்கப்பட்டிருப்பினும், காண் போரின் கலமான கருத்தையும் கனமாக்குமே!” என்று.
முகம்மது பின் காசிம் தனது 17 வயதில் சிந்துபகுதியை நோக்கி ஏன் படை நடத்தி வந்தார், அவர் பெற்ற வெற்றிகள் என்ன, சிந்து மக்களிடையே அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன, சிந்துவை விட்டு ஈராக்கிற்கு நான் செல்கிறேன் என்று அவர் கூறும்போது மக்களிடையே ஏற்பட்ட குழப்பங்கள் என அனைத்தையும் தத்ரூபமாக கூறுகிறது ‘சிந்து நதிக்கரையினிலே’ என்ற இந்நாவல்.
Reviews
There are no reviews yet.