Description
‘சுதந்திரத்தின் விலை மரணம்…’
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மால்கம் எக்ஸ் கூறிய வார்த்தைகள் இவை. சுதந்திரத்தையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக தன்னுயிரை ஈந்தவர்களின் எண்ணிக்கை சங்கிலித் தொடராக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில் இணைந்திருப்பவர் எகிப்தின் அதிபர் முகம்மது முர்ஸி.
முர்ஸியின் தோற்றத்தில் கவர்ச்சி இல்லாமல் இருந்திருக்கலாம், அவரின் பேச்சிலும் வசீகரம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் எகிப்தின் முதல் ஜனநாயக அதிபர் என்ற அழிக்க முடியாத பட்டத்துடன்
ஜனநாயகத்தை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த உத்தமர் என்ற அடையாளத்துடன் வரலாற்றில் அவர் பெயர் இடம்பெற்றுவிட்டது. இப்போது வாழ்பவர்களுக்கும் இனிவரும் தலைமுறையினருக்கும் அவரின் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
Reviews
There are no reviews yet.