Description
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் பலரும் பாகிஸ்தானிற்கு சென்றுவிட்டனர். இச்சூழலில்தான் முஸ்லிம் லீக் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, இக்கட்டான அச்சூழலில் இந்திய முஸ்லிம் சமூகத்தின் வழிகாட்டியாகவும் தலைவராகவும் உயர்ந்தார் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில்.
தமிழ்நாடு அரசியலில் கிங் மேக்கராக திகழ்ந்த காயிதே மில்லத், அரசியல் மட்டுமன்றி தமிழக முஸ்லிம்களின் கல்வித் தேவையையும் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ளார். இவ்வாறு பன்முகத்தன்மை கொண்ட காயிதே மில்லத் குறித்து ஏற்கெனவே சில புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும், இளம் தலைமுறையினருக்கு காயிதே மில்லத் குறித்த பல அறிய தகவல்களை இப்புத்தகம் கொண்டுள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.
Reviews
There are no reviews yet.