Description
(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது… (குர்ஆன் 14 : 24)
மக்களை நல்வழிப்படுத்த அறிவுரைகள் அவசியம். அந்த அறிவுரைகள் சுருக்கமாகவும் எளிமையாகவும் இருந்தால்தான் கேட்பவர்களுக்கு எளிதாகப் புரியும், அவர்களிடம் உரிய தாக்கத்தையும் அது ஏற்படுத்த முடியும். உவமைகள், உருவகங்களை பயன்படுத்தி அறிவுரைகளை வழங்குவது ஒரு சிறந்த நடைமுறை.
அந்த வகையில் இஸ்லாத்தின் செய்திகளை மக்களுக்கு எடுத்து வைக்கும் விதமாக மரத்தை உதாரணமாகக் கொண்டு மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரி எழுதியுள்ள இந்த நூல் மக்களுக்கு பயன் தரும்.





Reviews
There are no reviews yet.