Description
மதமும் ஆன்மீகமும் ஒரே பொருளிலேயே புரிந்து கொள்ளப்படுகிறது. வாழ்க்கையின் பொருளை புரிந்துகொள்ளவும், வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்தவும் மனிதன் கடைப்பிடிக்கும் உள ரீதியான வழிமுறையே ஆன்மீகம்.
மதம் இன்று பெரியதொரு பட்ஜெட்டாக மாறியிருக்கிறது. இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறிக்கொண்டு சில குழுக்கள் காரியங்களை நிர்வகிக்கின்றார்கள். சாமியார்கள், மத அறிஞர்கள், பேச்சாளர்கள், தலைவர்கள் ஆகியோரின் ஆடம்பர வாழ்க்கை முறை மக்களின் உள்ளங்களில் அவர்கள் மீது வெறுப்பை உருவாக்குவதற்கு பதிலாக மரியாதையையும், கண்ணியத்தையும் பெற்றுத் தருகிறது. மதத்தின் பெயரால் நாடு முழுவதும் உருவாகும் நிறுவனங்கள் வாழ்க்கையில் எல்லை மீறி வாழ்பவர்களுக்கு புகலிடங்களாக அமைந்துள்ளன.
ஆராதிப்பவர்களும், ஆராதிக்கப்படுபவர்களும் புரோகித மதத்தின் அத்தியாவசியமான அங்கமாகியுள்ளனர். தன்னை சுற்றி ஒரு மக்கள் திரளை உருவாக்கவே பலரும் முயற்சிக்கின்றனர். மத சடங்குகளையும் மதம் என்று தோன்றச் செய்யும் சம்பிரதாயங்களையும் அதற்காக உபயோகிக்கின்றனர்.
இவ்வாறு இன்று அனுஷ்டானமாக மாறிய மார்க்கம் வேறு; நீதியின் தராசுடன் நபிமார்களும், வேதங்களும் கொண்டு வந்த மார்க்கம் வேறு என்பதை விவாதிக்கிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.