Description
மக்கள் தொகை தொடர்பான விவாதங்கள் நடைபெறாத நாடுகளோ, நாட்களோ இல்லை என்று சொல்லிடும் அளவிற்கு இந்த விஷயம் குறித்தான செய்திகள், சர்ச்சைகள் பூமிப்பந்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை அனைத்தையும் மதவாத கண்ணாடி கொண்டு பார்த்திடும் சங்பரிவார பாஜகவினர் இந்த விவகாரத்திற்கும் மதச்சாயம் பூசிடும் வேலையை மேற்கொண்டு வருகின்றனர்.
“மக்கள் தொகை விவகாரத்தில் நாம் என்ன செய்யக்கூடாது என்பதுதான் சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்” என்கிறார் இந்திய மக்கள் தொகை நிறுவனம் (Population Foundation of India) என்ற அமைப்பின் செயல் இயக்குனர் பூனம் மத்ரஜா-.
மக்கள் தொகை பெருக்கமோ அல்லது வீழ்ச்சியோ ஏற்படுத்திய, ஏற்படுத்தி வருகின்ற குறுகியகால / நீண்டகால லாப நஷ்டங்களை பட்டியலிட்டு விளக்குகிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.